ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs PAK 2nd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 80 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய ஜிம்பாப்வே அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ZIM vs PAK 2nd ODI: Match Details
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs பாகிஸ்தான்
- இடம் - குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
- நேரம் - மதியம் 1 மணி (இந்திய நேரப்படி)
ZIM vs PAK 2nd ODI Live Streaming Details
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம்.
ZIM vs PAK: Head-to-Head In ODIs
- மோதிய போட்டிகள் - 63
- ஜிம்பாப்வே - 06
- பாகிஸ்தான் - 54
- முடிவில்லை 03
ZIM vs PAK: Ground Pitch Report
இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 93 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 39 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 49 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 234 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 198 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 399 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Zimbabwe vs Pakistan Predicted XIs
ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, ஜாய்லார்ட் கும்பி, டியான் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, பிரையன் பென்னட், பிராண்டன் மவுடா, ரிச்சர்ட் ந்கராவா, பிளெஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு
பாகிஸ்தான்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான் (கே), ஹசீபுல்லா கான், ஆகா சல்மான், எம்.டி. இர்பான் கான், அமீர் ஜமால், ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், பைசல் அக்ரம்
ZIM vs PAK: Dream11 Team
- விக்கெட் கீப்பர்: முகமது ரிஸ்வான்
- பேட்டர்ஸ்: கிரேக் எர்வின், சைம் அயூப், அப்துல்லா ஷபிக்
- ஆல்ரவுண்டர்கள்: சிக்கந்தர் ராசா (கேப்டன்), சீன் வில்லியம்ஸ், சல்மான் அலி ஆகா
- பந்துவீச்சாளர்கள்: பைசல் அக்ரம், ரிச்சர்ட் ந்கராவா, பிளெஸ்ஸிங் முசரபானி, ஹாரிஸ் ரவுஃப் (துணை கேப்டன்)
ZIM vs PAK 1st ODI Dream11 Prediction, Today Match ZIM vs PAK, ZIM vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Pakistan
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.