ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Dec 02 2024 13:35 IST
Image Source: Cricketnmore

ZIM vs PAK 2nd T20I Dream11 Predictionபாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டவது டி20 போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்யும். தேசமயம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜிம்பாப்வே அணி இப்போட்டில் விளையாடும். இதனால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

ZIM vs PAK 2nd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: ஜிம்பாப்வே vs பாகிஸ்தான்
  • இடம்: குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், புலவாயோ
  • நேரம்: மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி) 

ZIM vs PAK 2nd T20I Live Streaming Details

ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில்  நேரலையில் காணலாம். 

ZIM vs PAK: Head-to-Head In T20is

  • மோதிய போட்டிகள்: 19
  • ஜிம்பாப்வே: 02
  • பாகிஸ்தான்: 17
  • முடிவில்லை: 00

ZIM vs PAK: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை 20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 14 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 06 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 154 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 130 ரன்களாகவும் உள்ள நிலையில், இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 236 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Zimbabwe vs Pakistan Predicted XIs 

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: தடிவானாஷே மருமணி, பிரையன் பென்னட், டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா (கே), ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, தஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் ந்ங்கராவா, பிளெஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு

பாகிஸ்தான் உத்தேச லெவன்: சைம் அயூப், உமைர் யூசுப், உஸ்மான் கான், சல்மான் ஆகா (கே), தயாப் தாஹிர், இர்பான் கான், ஜஹந்தத் கான், அப்பாஸ் அஃப்ரிடி, அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், சுபியான் முகீம்

ZIM vs PAK: Dream11 Team

  • Wicket-keeper: உஸ்மான் கான்
  • Batters: ரியான் பர்ல் , பிரையன் பென்னட், தையாப் தாஹிர்
  • All-rounders: வெஸ்லி மதவெரே, சிக்கந்தர் ரஸா (கேப்டன்), ஆகா சல்மான்
  • Bowlers: ஹாரிஸ் ராவுஃப், அப்பாஸ் அஃப்ரிடி, ரிச்சர்ட் ங்காரவா, சுஃபியான் முகீம்

ZIM vs PAK 2nd T20I Dream11 Prediction, Today Match ZIM vs PAK, ZIM vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Zimbabwe vs Pakistan 

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை