ZIM s IND, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனை படைக்குமா இளம் இந்திய அணி?
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவடி 20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் இறங்கியுள்ளனர். இரு அணியில் அனுபவம் மற்றும் இளமை கலந்த வீரர்கள் இடம்பிடித்துள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து, ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அடுத்த தலைமுறை வீரர்கள் களமிறங்க உள்ளனர். மேலும், உலகக் கோப்பை தொடரில் அங்கம் வகித்த ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் மூன்றாது போட்டியில் இருந்து அணியினருடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடரில் கலக்கிய அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், துருவ் ஜுரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், ரியான் பராக்கும், பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தரும் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் உத்தேச லெவன்: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரல், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய், கலீல் அகமது.
ஜிம்பாப்வே அணி
மறுபக்கம் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியானது இத்தொடருக்கான அணியில் பல்வேறு மாற்றங்களைச் சேய்துள்ளது. அந்தவகையில் ரியான் பார்ல், ஜெய்லார்ட் கும்பி, கிரேய்க் எர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் போன்ற அனுப்வ வீரர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதேசமயம், ஆன்டும் நக்வி, டெண்டாய் சதாரா, பிராண்டன் மவுடா, வெஸ்லி மதவெரே உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஜிம்பாப்வே அணியின் பேட்டிங்கில் ஜோனதன் கேம்ப்பெல், இன்னசென் கையா, கிளைவ் மடாண்டே ஆகியோரும், பந்து வீச்சில் பிளெஸிங் முஸரபானி, பிராண்டன் வெலிங்டன் மஸகட்ஸாவும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு, ஆல்-ரவுண்டராக கேப்டன் சிக்கந்தர் ரஸா, பிரையன் பென்னெட்டும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால் இந்த அணி நிச்சயம் கடும் சவாலை அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
ஜிம்பாப்வே உத்தேச லெவன்: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி, சிக்கந்தர் ரஸா (கேப்டன்), ஜானாதன் காம்ப்பெல், இன்னசென்ட் கையா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரா, லூக் ஜாங்வே, டெண்டாய் சதாரா, வெலிங்டன் மஸகட்ஸா, பிளெஸிங் முஸரபானி.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ZIM vs IND 1st T20I Dream11 Team
- விக்கெட் கீப்பர் - துருவ் ஜூரல்
- பேட்ஸ்மேன்கள் - ரிங்கு சிங், ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தடிவானாஷே மருமணி
- ஆல்ரவுண்டர் - சிக்கந்தர் ரஸா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, பிரையன் பென்னட்
- பந்துவீச்சாளர்கள் - முகேஷ் குமார், பிளெஸிங் முசரபானி, ரவி பிஷ்னோய்.