ஜிம்பாப்வே vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Nov 01 2022 15:51 IST
Zimbabwe vs Netherlands, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probabl (Image Source: Google)

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பிரிவில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் சிறந்த அணிகள் கூட வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் நாளை நடைபெறும் இரு போட்டிகளில் குரூப் 2இல் இடம்பிடித்துள்ள அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி நாளை காலை நடைபெறும் முதல் போட்டியில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் நெதர்லாந்து அணி அடுத்தடுத்து 3 தோல்விகளைச் சந்தித்து அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி ஒரு வெற்றியைப் பெற்று இன்னும் போட்டியில் நீடித்து வருகிறது. இனிவரும் இரண்டு போட்டிகளிலும் அந்த அணி பிரமாண்ட வெற்றியைப் பதிசெய்யும் வகையில் அந்த அணிக்கும் சிறுது வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள், சிறப்பான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளனர். ஏறத்தாழ இரு அணியும் சம பலத்துடன் இருந்தாலும், ஜிம்பாப்வே அணிக்கான வெற்றி வாய்ப்புகளாக பார்க்கப்படுகிறது. 

அதன்படி ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா, வெஸ்லி மதவெரே, சீன் வில்லியம்ஸ் ஆகியோரும், பந்துவீச்சில் நகர்வா, முசரபாணி, ரியான் பர்ல் ஆகியோரையும் கொண்டுள்ளது. 

அதேசமயம் மறுபக்கம் நெதர்லாந்து அணியின் பேட்டிங்கில் மேக்ஸ் ஓடவுட், மைபர்க், பாஸ் டி லீட், டாம் கூப்பர் ஆகியோரும் பந்துவீச்சில் பிரிங்கிள், கிளாசென், வன் மீகிரன் ஆகியோரும் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs நெதர்லாந்து
  • இடம் - அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
  • நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • ஜிம்பாப்வே - 03
  • நெதர்லாந்து - 01

உத்தேச அணி

ஜிம்பாப்வே: வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா, ரியான் பர்ல், பிராட் எவன்ஸ், டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் நகர்வா, பிளெசிங் முசரபானி.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், ஸ்டீபன் மைபர்க், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அஹ்மத், பிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்டிங்: கொலின் அக்கர்மேன், மேக்ஸ் ஓ'டவுட், கிரேக் எர்வின், ரியான் பர்ல்
  • ஆல்ரவுண்டர்: சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதேவரே,
  • பந்துவீச்சு: டிம் பிரிங்கிள், பால் வான் மீகெரென், பிளஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா

* This fantasy XI is based on the understanding, analysis, knowledge, and instinct of the writer. While making your prediction, consider the points mentioned, and make your own decision.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை