டி20 உலகக்கோப்பை: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐக்கியஅரபு அமீரகத்தில் இம்மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், 2ஆவது இடம் பெறும் அணிக்குமான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் வரும் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 16 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையாக 56 லட்சம் டாலர்களை (ரூ.42கோடி) ஐசிசி ஒதுக்கீடு.
இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 16 லட்சம் டாலர்கள்(ரூ.12 கோடி) பரிசாகவும், 2ஆவது இடம் பெறும் அணிக்கு 8 லட்சம் டாலர்கள் (ரூ.6 கோடி) பரிசாக வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடக்கும் அரையிறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கும் தலா 4 லட்சம் டாலர்கள் (ரூ.3 கோடி) பரிசு வழங்கப்படும்.
Trending
அரையிறுதிக்குள் செல்லாமல் தோல்வி அடைந்த 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் டாலர்கள்(ரூ.52 லட்சம்) பரிசுத் தொகையும், முதல் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் டாலர்கள்(ரூ.30 லட்சம்) பரிசாக வழங்கப்படும். கடந்த 2016ம் ஆண்டைப் போல் சூப்பர் 12 சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகையும் வழங்கப்படும்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
போட்டி நடக்கும்போது இடைவெளி விடுதலுக்கு நேரத்தை ஐசிசி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு இன்னிங்ஸ் நடுப்பகுதியிலும் 2.30 நிமிடங்கள் இடைவெளிவிடப்படும். மேலும் ஒவ்வொரு அணியும் இரண்டு டிஆர்எஸ் விதியை உபயோகிக்க முடியும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now