Advertisement

ENG vs WI, 1st Test: ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் அபாரம்; வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க்க போராடி வருகிறது.

Advertisement
ENG vs WI, 1st Test: ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் அபாரம்; வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!
ENG vs WI, 1st Test: ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் அபாரம்; வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 12, 2024 • 10:40 AM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 121 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 12, 2024 • 10:40 AM

இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஸக் கிரௌலி 76 ரன்களையும், ஒல்லி போப் 57 ரன்களையும் சேர்க்க அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில்  3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 15 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 25 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை கடந்தனர். 

Trending

அதன்பின் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 50 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி ப்ரூக்கும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் கஸ் அட்கின்ஸன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது 371 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதனையடுத்து 250 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிரத்வைத் 4 ரன்களுக்கும், கிர்க் மெக்கன்ஸி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மைக்கேல் லூயிஸ் 14 ரன்களிலும், கெவாம் ஹாட்ஜ் 4 ரன்களிலும், அலிக் அதானஸ் 22 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 20 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 171 ரன்கள் பின் தங்கிய நிலையில் விண்டீஸ் அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement