AUS vs SA, 1st Test: சொற்ப ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; முன்னிலையில் ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் 60 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியிடம் அந்த இடத்தை இழக்க வாய்ப்புள்ளது.
அதன்படி வெற்றி கட்டாயத்துடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
Trending
அதன்பட் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் கைல் வெரெய்ன் மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். வெரெய்ன் 64 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 152 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கம்மின்ஸ் மற்றும் போலாண்ட் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், காசிசோ ரபாடா வீசிய முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகிய இருவரும் தலா 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் 27 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி 4ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்களை சேர்த்தனர். இதில் ஸ்மித் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக பேட்டிங் செய்த அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட் 78 ரன்களுடன் களத்தில் இருக்கும் நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது. சதத்தை நோக்கி பேட்டிங் செய்துவரும் டிராவிஸ் ஹெட் 78 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now