
இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள்பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை உஸ்மான் கவாஜா 147 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்திலும் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
USMAN KHAWAJA
— CRICKETNMORE (@cricketnmore) January 30, 2025
Live #SLvAUS Score @ https://t.co/KFPA2DaTeC pic.twitter.com/hIJ3IWpMer