
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3ஆவது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுசாக்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தின்போது லபுசாக்னே அபாரமாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்தார் . 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுசாக்னே ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது. இதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார் .
மறுபுறம் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.