
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் கடந்த ஜூலை 16 இல் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா ஜோடி 122 ரன்களும் மேதிவ்ஸ் 61 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. பாகிஸ்தான் சார்பாக ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரர் அஹமது தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து, விளையாடிய பகிஸ்தான் அணி 2ஆம் நாள் முடிவில் 221/5 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணியின் சௌத் சகீல் 69 ரன்களுடனும், அகா சல்மான் 61 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆகா சல்மான் 83 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுபக்கம் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் இரட்டைச் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதில் கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்த சௌத் சகீல் 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் எடுத்தார். மேலும் இலங்கையில் இரட்டைச் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.