Advertisement

NZ vs SA, 1st Test: வலிமையான நிலையில் நியூ; தோல்வியைத் தவிர்க்குமா தென் ஆப்பிரிக்கா!

ஹென்ரி நிக்கோல்ஸ் சதம் விளாச கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

Advertisement
1st Test: New Zealand's Henry Duo Continue South Africa Domination On Day 2
1st Test: New Zealand's Henry Duo Continue South Africa Domination On Day 2 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 18, 2022 • 01:06 PM

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் மேட் ஹென்ரி 7 விக்கெட் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா 95 ரன்னில் சுருண்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 18, 2022 • 01:06 PM

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்ரி நிக்கோல்ஸ் 37 ரன்களுடனும், நீல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Trending

இன்று 2ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஹென்ரி நிக்கோல்ஸ்- நீல் வாக்னர் ஜோடி சிறப்பாக விளையாடியது. நீல் வாக்னர் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஹென்ரி நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த விக்கெட் கீபப்ர் டாம் பிளண்டல் 96 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டார். காலின் டி கிராண்ட்ஹோம் 45 ரன்கள் எடுத்து அரைசதத்தை நழுவவிட்டார்.

7 விக்கெட் வீழ்த்தி மேட் ஹென்ரி அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 117.5 ஓவரில் 482 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணியில் ஒலிவியர் 3 விக்கெட்டும் ரபடா, மார்க்ரம், ஜான்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின் 387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. இந்த இன்னிங்சிலும் அந்த அணி விக்கெட்டை மளமளவென இழந்தது. டீன் எல்கர், எர்வீ ஆகிய தொடக்க வீரர்கள் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அடுத்து வந்த மார்கிராம்  2 ரன்னில் நடையை கட்டினார்.

தென்ஆப்பிரிக்கா 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருக்கும்போது 3ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டஸ்சன் 9 ரன்னுடனும், பவுமா 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது தென்ஆப்பிரிக்கா 353 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை காலை ஆட்டம் தொடங்கியதும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement