
2 Ireland Players Test Positive Ahead Of Limited Overs Tour Against West Indies (Image Source: Google)
அயர்லாந்து அணி வரும் ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது.
இத்தொடருக்கான அயர்லாந்து அணியும் ஃபுளோரிடாவிலிருந்து ஜமைக்கா வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கே ஆகிய இருவருக்கும் கரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்துதல் காலத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் அணியில் இணைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.