
21st Century Born Padikkal's Finds 'Feat' On Debut (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குர்னால் பாண்டியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 9 வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி நேற்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துள்ளன.
அதிலும் குறிப்பாக இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தீபக் சஹர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோருக்கு பதிலாக புதுமுக வீரர்கள் தேவ்தத் படிக்கல், நிதீஷ் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், சக்காரியா ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடினர்.
இந்த போட்டியின்போது 3ஆவது வீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் படிக்கல் 23 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.