
இங்கிலாந்து மகளிர் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டர்பனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தஸ்பின் பிரிட்ஸ் 5 ரன்னிலும், சுனே லூஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த லாரா வோல்வார்ட் - அன்னேரி டெர்க்சன் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட் 35 ரன்னிலும், டெர்க்சன் 29 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிற்ங்கிய வீராங்கனைகளில் சோலே ட்ரையன் 45 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.