
SL vs BAN, 2nd Test: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 25) கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் - அனாமுல் ஹக் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.இதில் ஒருபக்கம் ஷாத்மான் இஸ்லாம் ரனக்ளைச் சேர்த்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான அனாமுல் ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட் இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஷாத்மான் இஸ்லாமுடன் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.