குல்தீப் யாதவ் நீக்கம்; ராகுலை கடுமையாக சாடும் ரசிகர்கள்!
வங்கதேசத்துடனான தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியின் மிர்பூர் பிட்ச் பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை, புரியவில்லை என்று கூறும் கேப்டன் கேஎல்ராகுல், முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி நாயகனான குல்தீப் யாதவ்வை இந்த டெஸ்ட் போட்டியில் உட்கார வைத்தது ஏன் என்பது குறித்து இப்போது பல கேள்விகள் எழுந்துள்ளன,
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, ஜெய்தேவ் உனாத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன், ஆனால் இந்த டெஸ்ட்டில் பிட்ச் எப்படி இருந்தாலும் அவரைப்போய் உட்கார வைப்பதை யாராலும் ஜீரணிக்கவே முடியாது, அதைவிடக் கொடுமை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தன் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட குல்தீப் யாதவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டை அணியில் தேர்வு செய்திருப்பது.
Trending
இப்போட்டியின் டாஸ் நிகழ்வின் போது பேசிய கேஎல் ராகுல்,“எனக்கு இந்தப் பிட்ச் குழப்பமாக இருக்கிறது, பிட்ச் பற்றி சரியாக எனக்குத் தெரியவில்லை, அதைக் கணிக்க நிபுணர்கள், பயிற்சியாளர்கள் என்று அனுபவஸ்தர்கள் நிறைய பேர் உள்ளனர், அவர்கள் சொல்வதைக் கேட்கிறேன், குல்தீப் யாதவ்வுக்குப் பதிலாக ஜெய்தேவ் உனாட்கட் வந்துள்ளார், குல்தீப் மீதான மிகக் கடினமான முடிவே இது. அஸ்வின், அக்சர் ஸ்பின்னுக்குப் போதும் என்று நினைக்கிறோம், உனாட்கட் வந்தது அனைத்துப் புலங்களையும் ‘கவர்’ செய்யும்” என்றார்.
இதனால் ஒரு பிட்ச்சைக்கூட கணிக்க முடியாத ஒருவர் எப்பது சர்வதேச போட்டியின் கேப்டனாக செய்லபட்டு வருகிறார்? என்றும், குல்தீப் யாதவின் நீக்கத்திற்கு காரணம் கேஎல் ராகுல், ராகுல் டிராவிட் தான் எனவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now