Advertisement
Advertisement
Advertisement

SA vs WI, 2nd Test: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 11, 2023 • 20:26 PM
2nd Test: South Africa Beat West Indies By 284 Runs, Sweep Series 2-0
2nd Test: South Africa Beat West Indies By 284 Runs, Sweep Series 2-0 (Image Source: Google)
Advertisement

தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான  2ஆவது டெஸ்ட் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 320 ரன்களையும், அதனைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 251 ரன் எடுத்தன.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்களை எடுத்திருந்தது. இதில் மார்க்ரம் ஒரு ரன்னுடனும், டீன் எல்கர் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.  அதன்பின் நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு டீன் எல்கர் (5), டோனி டி ஜோர்ஜி (1), மார்க்ரம் (18) ஏமாற்றினர். ரியான் ரிக்கெல்டன் (10), ஹென்ரிச் கிளாசன் (14) ஆகியோரும் நிலைக்கவில்லை. 

Trending


ஆனால் கடந்த போட்டி மற்றும் கடந்த இன்னிங்ஸில் சொதப்பிய கேப்டன் டெம்பா பவுமா இந்த இன்னிங்ஸில் விஸ்வரூபமெடித்தார். டெம்பா பவுமா, வியான் முல்டர் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இதில் அபாரமாக விளையாடிய பவுமா சதம் விளாசினார். இந்த இணை ஆறாவது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்த போது முல்டர் (42) அவுட்டானார். 

அவரைத்தொடர்ந்து வந்த சைமன் ஹார்மரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனாலும் மறுமுனையில் டெம்பா பவுமா தனி ஒருவனாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்து, 356 ரன் முன்னிலை பெற்றிருந்தது. 

இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் டெம்பா பவுமா 172 ரன்களிலும், கேஷவ் மகாராஜ் 10 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் விக்கெட்டை இழந்தனார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 321 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 390 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் இந்த இன்னிங்ஸிலும் கேப்டன் பிராத்வைட் 18, சந்தர்பால் 2, ரெய்ஃபெர் 0, பிளாக்வுட்4 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர் என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜோஷுவா டா சில்வா மட்டும் அதிரடியாக விளையாடி 34 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கொட்ஸி, சிமொன் ஹர்மர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 284 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டெம்பா பவுமா ஆட்டநாயகனாகவும், ஐடன் மார்க்ரம் தொடர் நயாகனாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement