இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ஆடுகளங்கள் முக்கியமில்லை - ஷகிப் அல் ஹசன்!
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாடும்போது, மைதாங்கள் மற்றும் ஆடுகளம் என்பது பெரிதாக முக்கியமில்லை என வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சமீபத்தில் நடந்துமுடிந்தது.
இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Trending
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் தமது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி சொந்த மண்ணில் மட்டுமில்லாமல் வெளியேயும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எந்த நாடும் இந்தியாவில் வந்து விளையாடுவது மிகவும் கஷ்டன் எனும் போது நாங்கள் மட்டும் அதில் விதிவிலக்கில்லை. ஆனால் அதைச் சொல்லிவிட்டு, அவர்களுக்கு எதிராக நாம் நன்றாக விளையாட வேண்டும்.
அப்போது தான் நம்மால் முடியும் என்று நினைக்கும் எண்ணம் தோன்றுவதுடன், இந்திய அணிக்கு எதிராக போராடும் குணத்தையும் வெளிப்படுத்த முடியும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாடும்போது, மைதாங்கள் மற்றும் ஆடுகளம் என்பது பெரிதாக முக்கியமில்லை. ஏனெனில் அவர்கள் எதிரணியை வீழ்த்துவதற்கு தேவையான திட்டங்களை முன்கூட்டியே வகித்து வைத்திருப்பார்கள்.
அதனால் அவர்களிடம் தரமான ஸ்பின்னர்கள் இருப்பார்கள், தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள், தரமான பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். அதனால், அவர்களுக்கு எதிராக ஆடுகளம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். அதனால் நாங்கள் தற்போது சென்னை விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் செய்ததை விட, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
Win Big, Make Your Cricket Tales Now