Advertisement

Unofficial Test 2: டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி!

இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Advertisement
Unofficial Test 2:  டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி!
Unofficial Test 2: டிராவில் முடிந்த இங்கிலாந்து லையன்ஸ் - இந்தியா ஏ போட்டி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 09, 2025 • 11:08 PM

இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானது நார்த்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லையன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 09, 2025 • 11:08 PM

இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் சதமடித்தும், துருவ் ஜூரெல் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின்னர் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களைச் சேர்த்திருந்த துருவ் ஜூரெல் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 15 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 116 ரன்களைச் சேர்த்த கையோடு கேஎல் ராகுலும் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து லையன்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் டங்க் மற்றும் ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து லையன்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹைன்ஸ் 54 ரன்களுக்கும், எமிலியோ கே 71 ரன்களையும், ஜோர்டன் காக்ஸ் 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளைவில் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய ஏ அணி தரப்பில் கலீல் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய ஏ அணி 21 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் அரைசதம் கடந்தனர். அதன்பின் 59 ரன்களில் ராகுலும், 80 ரன்களில் ஈஸ்வரனும் விக்கெட்டை இழக்க மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய கடைசி நாள் அட்டத்தை துருவ் ஜூரெல் 6 ரன்னுடனும், நிதீஷ் குமார் ஒரு ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் ஜூரெல் 28 ரன்களுக்கும், நிதீஷ் ரெட்டி 42 ரன்களுக்கும், ஷர்தூல் தாக்கூர் 34 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த தனுஷ் கோட்யான் மற்றும் அன்ஷுல் கம்போஜ் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், தனுஷ் கோட்யன் 90 ரன்களையும், அன்ஷுல் கம்போஜ் 51 ரன்களைச் சேர்த்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செவதாக அறிவித்தது. இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னின்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 417 ரன்களைச் சேர்த்தது. லையன் அணி தரப்பில் ஜார்ஜ் ஹில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read: LIVE Cricket Score

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணியில் டாம் ஹைன்ஸ், எமிலோ கே, ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி 32 ரன்களில் 23 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் நான்காம் நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே மீதி இருந்ததால் இப்போட்டி முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இதன்மூலம் இந்திய ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியானாது டிராவில் முடிவடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement