Advertisement

ஐபிஎல் 2022: சிஎஸ்கே மீண்டும் அணிக்குள் எடுக்க தீவிரம் காட்டும் 3 வீரர்கள்!

சிஎஸ்கே அணி 3 வீரர்களை மட்டும் மீண்டும் அணிக்குள் எடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
3 players Chennai Super Kings can retain ahead of mega auction
3 players Chennai Super Kings can retain ahead of mega auction (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 09, 2022 • 02:18 PM

ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் அனைத்து அணிகளும் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணிக்காக கேப்டன் தோனி புதிய வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 09, 2022 • 02:18 PM

அதன்படி கடந்த சீசன்களில் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்கவுள்ளனர். இதற்காக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்றும் தோனி அறிவுறுத்தியிருப்பதாக தெரிகிறது. ஆனால் அந்த லிஸ்டில் சுரேஷ் ரெய்னா இல்லை.

Trending

சிஎஸ்கேவுக்கு கடந்த 2 சீசன்களாக ருதுராஜ் கெயிக்வாட் - டூ பிளசிஸ் ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். நன்கு செட்டான ஜோடி என்பது மட்டுமல்லாமல், டூ பிளசிஸ் இன்னும் சிறப்பான ஃபார்மில் உள்ளார். கடந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். 

மேலும் சில உள்நாட்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளதால், தோனியின் முதன்மை தேர்வாக இன்னும் டூ பிளசிஸ் இருந்து வருகிறார். இவரின் அடிப்படை தொகையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ.10 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் தோனியின் செல்லப்பிள்ளைகளில் தீபக் சஹாரும் ஒருவர். பவர் பிளே ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை கொண்டவர். சமீபத்தில் இந்திய அணிக்காக பவுலிங் மற்றும் பேட்டிங் என அதிரடி ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எனவே இவரின் பெயரையும் தோனி குறித்து வைத்துள்ளார்.

சிஎஸ்கேவின் பலமே ஆழமான பேட்டிங் வரிசை தான். அந்தவகையில் ஷர்துல் தாக்கூர் இக்கட்டான சூழலில் விக்கெட் எடுப்பது மட்டுமல்லாமல், பேட்டிங்கும் சிறப்பாக செய்வார். ரன்கள் அதிகளவில் வாரி கொடுத்தாலும், அவரின் விக்கெட் எடுக்கும் திறமைக்காகவே மீண்டும் அணிக்குள் எடுக்க தோனி பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.

தோனியின் இந்த பட்டியலில், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, பிராவோ, ஹாசில்வுட் போன்றோர் இல்லை என்பது தான் ரசிகர்களின் கவலையாக உள்ளது. எனினும் பழைய வீரர்களை முடிந்தவரை எடுப்பதற்கு முயற்சி செய்வோம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் நம்பிக்கை கொடுத்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement