இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தங்கள் செயல்திறனால் ஏமாற்றமடைந்த மூன்று இந்திய வீரர்கள் தற்போது டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படாமல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிய மூன்று வீரர்கள் குறித்து இந்த சிறப்பு கட்டுரையில் காண்போம்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றியைப் பதிவுசெய்ததன் காரணமாக 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்தன. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ஏமாற்றமளித்த மூன்று இந்திய வீரர்கள் தற்போது டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவாகிவுள்ளது. அந்த மூவர் குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்
அன்ஷுல் கம்போஜ்
ஹரியானாவைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ஆகாஷ் தீப் காயத்தை சந்தித்ததன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டதுடன், பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்தார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், 89 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இதனால் அடுத்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஷர்துல் தாக்கூர்
இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் ஷர்துல் தாக்கூர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படத் தவறிய ஷர்துலும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர், பேட்டிங்கில் மொத்தமாக 46 ரன்களையும், மூன்று இன்னிங்ஸ்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அதனால்தான் அவர் எங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கருண் நாயர்
Also Read: LIVE Cricket Score
இந்த பட்டியலில் கருண் நாயரும் இடம்பெற்றுள்ளார். உள்நாட்டு போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்ற கருண் நாயர் அதனை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் 8 இன்னிங்ஸில் 25.62 என்ற் சராசரியில் 205 ரன்களை மட்டுமே சேர்த்தார். மேலும் தற்போது 33 வயதை எட்டியுள்ள அவருக்கு, அடுத்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now