
நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் இளம் அதிரடி வீரர் சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிகெட்டில் அறிமுகமானார். இதையடுத்து தனது அறிமுக போட்டியில் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறார்.
அதேசமயம் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லிக் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த சர்ஃப்ராஸ் கான் மோசமான ஃபார்ம் காரணமாக வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நடபாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சர்ஃப்ராஸ் கானின் ஆரம்ப விலையான ரூ.20 லட்சத்திற்கு எந்த அணியும் அவரை வாங்க முன்வராததால், ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் இந்திய அணியில் இடம்பிடித்ததுடன், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளதால், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இவர் மாற்று வீரராக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் ரூ.50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை ஒப்பந்தம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதன்படி அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள அணிகள் குறித்து கிழே பார்ப்போம்..