இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி நேற்று கயானா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்கள் இலக்காக வைக்க, அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு சூரியகுமார் 44 பந்துகளில் பத்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கி தந்தார்.
மிகச் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் சதம் அடிப்பார் என்ற நிலையில் ஆட்டம் இழந்தார். மேலும் நேற்றைய மூன்றாவது போட்டியின் ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு நாள் தொடரிலும் வாய்ப்பு பெற்றிருந்த சூரியகுமார் யாதவுக்கு இந்த சுற்றுப்பயணத்தில் இது முதல் அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ், “நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. நான் வெளியே சென்று என்னை வெளிப்படுத்த முயற்சி செய்தேன். நான் பேட்டிங் செய்த விதத்தில் எல்லாம் வரிசையாக விழுந்து கொண்டே இருந்தது. மூன்றாவது சதத்தை தவற விட்டீர்களா? என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். முதலில் இன்று அடித்திருந்தால் அது எனது நான்காவது சர்வதேச சதம் என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறேன்.