4th Test Day 1: அறிமுக போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒன்றிலும் வெற்றிபெற்று தொடரில் நீடித்து வருகின்றன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாலர் ஆகாஷ் தீப் அணியில் இடம்பிடித்தார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன், சோயம் பஷீர் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அறிமுக வீரர் அகாஷ் தீப், ஆரம்பத்திலேயே ஸாக் கிரௌலியின் விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் அது நோபாலாக இருந்தது பெரும் எமாற்றத்தை அளித்தது.
Trending
அதன்பின் தனது அதிரடியைக் கட்டிய ஸாக் கிரௌலி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என அடித்து பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாட முயன்ற பென் டக்கெட் 11 ரன்கள் எடுத்த நிலையில், அதே ஓவரில் ஒல்லி போப்பும் ரன்கள் ஏதுமின்றி ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
பின்னர் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஸாக் கிரௌலியும் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அறிமுக வீரர் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் மீண்டும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் - ஜோ ரூட் இணை ஓரளவு தாக்குப்பிடித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன்பின் தொடர்ச்சியான பவுண்டரிகளை அடித்து வந்த ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் முதல்நாள் உணவு இடைவேளையின் போதே இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now