
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அவர் தனித்துவமான சாதனை ஒன்றையும் படைக்கவுள்ளார். ஏனெனில் பல சர்வதேச போட்டிகளில் விளையாடியும் ஐபிஎல் அணியின் கேப்டனாக மாற முடியாத பல ஜாம்பவான்கள் உள்ளனர், ஆனால் ராஜத் பட்டிதார் 4 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இதற்கு முன் 3 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிதிஷ் ராணா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.