
PAK vs BAN, Asia Cup 2023: இமாம், ரிஸ்வான் அரைசதம்; பாகிஸ்தான் அபார வெற்றி! (Image Source: Google)
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுகள் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை அடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம், மெஹிதி ஹசன் களமிறங்கினர். ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும், நயிம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
ஆனால், சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷாகீப் அல் ஹசன் 53 ரன்களையும், முஷ்பிகூர் ரஹிம் 64 ரன்களையும் சேர்ந்ததனர். ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.