மைதானத்தில் மோதிக்கொண்ட ரசிகர்கள்; வைரலாகும் காணொளி!
குஜராத் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மைதானத்திலிருந்த ரசிகர்கள் மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.
பின்னர், 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் நமன் திர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 43 ரன்களில் நடையை கட்டினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.
Trending
மேலும், மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 47 பந்துகளில் 62 ரன்கள் தேவைப்பட்டது. வரிசையாக மும்பை அணியில் டிவேல்டு பிரேவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என்று பேட்டிங் ஆர்டர் இருந்தது. எனினும் சீரான இடைவெளியில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் ஒரு ஓவருக்கு 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
முதல் 2 பந்தில் ஹர்திக் பாண்டியா 6, 4 என்று 10 ரன்கள் எடுத்தார். 3ஆவது பந்தில் அவர் ஆட்டமிழக்க, 4ஆவது பந்தில் பியூஷ் சாவ்லா ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
A fight took place between fans last night at the Narendra Modi Stadium.pic.twitter.com/GfGDCtIVg0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 25, 2024
இந்நிலையில் இப்போட்டியின் போது மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. ஆனால் அவர் எதர்காக மோதலில் ஈடுபட்டனர் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now