
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விலையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ஜொஹனன்ஸ்பர்கில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஸோர்ஸி மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி மேற்கொண்டு 9 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 320 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அல்ஸாரி ஜோசப், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.