Advertisement

AUS vs WI, 1st Test: ஸ்மித், லபுசாக்னே இரட்டை சதம்; இமாலய ஸ்கோரை நோக்கி விண்டீஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 524 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Advertisement
A Solid Response By West Indies With The Bat Led By Tagenarine Chanderpaul!
A Solid Response By West Indies With The Bat Led By Tagenarine Chanderpaul! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 01, 2022 • 03:32 PM

ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 01, 2022 • 03:32 PM

அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3ஆவது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுசாக்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Trending

இதையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இதில் மார்னஸ் லாபுசாக்னே அபாரமாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்தார் . 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுசாக்னே ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது.

இதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார் . சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் அடிக்கும் 4ஆவது இரட்டை சதம் இதுவாகும். மறுபுறம் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது . இதில் ஸ்டீவ் ஸ்மித் 200 ரன்கள் சேர்த்து இறுதிவரை  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதைதொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக சந்தர்பால் - கிரெய்க் பிராத்வையிட் இணை கமிறங்கினர். இதில் பிராத்வையிட் நிதானமாக விளையாட, மறுமுனையி சந்தர்பால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதனால் அந்த அணி 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களைச் சேர்த்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 524 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சந்தர்பால் 47 ரன்களுடனும், பிராத்வையிட் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இமாலய ஸ்கோரை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிவருவதால் நிச்சயம் இந்த போட்டியில் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement