
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியும், தென் ஆப்பிரிக்க அணி 3ஆவது போட்டியிலும் என வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் நீடிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஓய்வளிக்கபட, ஐடன் மார்க்ரம் அணியை தலைமை தாங்கினார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - ரீஸா ஹென்றிக்ஸ் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஹென்றிஸ்க் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 8 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி காக் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.