ஐபிஎல் அணிகளில் 5 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியின் ஆடும் லெவனிலும் அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் விளையாடிவந்த நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15ஆவது சீசனிலிருந்து 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக ஆடுகின்றன. எனவே 15ஆவது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்தது.
இந்த ஏலத்தில் மொத்தமாக அனைத்து அணிகளும் சேர்ந்து 551 கோடி செலவு செய்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்தன. அதிகபட்சமாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தீபக் சாஹரை ரூ.14 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கேகேஆர் அணி எடுத்தது.
Trending
ஐபிஎல் 15வது சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசன் இதற்கு முந்தைய சீசன்களைவிட மிகவும் சுவாரஸ்யமானதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.
இதுவரை 8 அணிகள் விளையாடி வந்ததால் ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சீசனிலிருந்து 10 அணிகள் ஆடுவதால், ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “10 அணிகளின் ஆடும் லெவனிலும் குறைந்தது 7 இந்திய வீரர்கள் ஆட வேண்டும். எனவே மொத்தம் 70 வீரர்கள். 70 இந்திய வீரர்களை கொண்டு ஆடுமளவிற்கு டெப்த் இருக்காது. எனவே நல்ல இந்திய வீரர்களை அதிகமாக கொண்டிருக்கும் ஐபிஎல் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். எனவே அனைத்து அணிகளும் நல்ல பேலன்ஸை கொண்டிருக்க வேண்டுமானால், அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீரர்களை ஆடும் லெவனில் அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now