
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா அலசி முக்கிய கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்.
இதில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் திறமையான வீரராக அறியப்பட்டாலும், அவருக்கு பிரச்சினையே அவர் தான் என்று கூறி இருக்கிறார்.
ஹசரங்கா பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஆட்டமிழந்து விடுகிறார். அதற்கு காரணம் சஞ்சு சாம்சன் தான், நீ யாராக இரந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உன் பந்துவீச்சை நான் அடிப்பேன் என அதிரடி காட்ட நினைத்து விக்கெட்டை இழக்கிறார் அதற்கு பதில் ஹசரங்கா ஓவரில் அமைதி காத்துவிட்டு, மற்றவர்கள் பந்துவீச்சில் அடிக்கலாம். சஞ்சு சாம்சன் தனக்குள் போராடி வென்றாலே வெற்றி கிடைக்கும்.