Advertisement

SA vs IND: டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

Advertisement
Aakash Chopra Picks His India's Test Squad For South Africa Tour; Leaves Out Shubman Gill
Aakash Chopra Picks His India's Test Squad For South Africa Tour; Leaves Out Shubman Gill (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 07, 2021 • 05:35 PM

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த தொடர் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் சற்று தாமதமாக டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 07, 2021 • 05:35 PM

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30, செஞ்சூரியன்

Trending

2வது டெஸ்ட்: ஜனவரி 3-7, ஜோஹன்னஸ்பர்க்

3வது டெஸ்ட்: ஜனவரி 11-15, கேப்டவுன்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இது மிகவும் முக்கியமான தொடர். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணியில், நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக ஆடிய மயன்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரரான ஹனுமா விஹாரி இடம்பெற்றுள்ளார். அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாமல் சொதப்பிவரும் சீனியர் வீரரான ரஹானேவை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்யவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement