
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே, சிறந்த ஆடும் லெவனை செட் செய்ய மற்றும் பென்ச் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் இளம் வீரர்கள் இந்திய அணியில் எடுக்கப்பட்டனர். முதல் டி20 போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், முதல் 2 போட்டிகளிலும் ஆடினார். 2வது போட்டியில் ஹர்ஷல் படேல் அறிமுகமானார்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யுஸ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு முதல் 2 போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணி முதல் 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டியிலாவது, ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ஆகாஷ் சோப்ரா கேள்வியெழுப்பியுள்ளார்.