ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பில் அதிருப்தி காட்டிய ஆகாஷ் சோப்ரா!
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி செப்டம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஆசியக்கோப்பை போன்ற பெரிய தொடருக்காக நீண்ட நாட்களாக வீரர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் தற்போது பிசிசிஐ தேர்வு செய்துள்ள பவுலிங் படை ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் காயத்தால் பாதிக்கப்பட்டதால், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
Trending
இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மட்டுமே அனுபவம் மிகுந்த வீரராக இருக்கிறார். முன்னணி வீரர்களான முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இருக்கும் சூழலில் அவர்களை புறக்கணித்துவிட்டு, அனுபவமே இல்லாத இரண்டு வீரர்களை நம்பி பிசிசிஐ களமிறக்குகிறது. இதனால் ரசிகர்கள் விமர்சனங்களை கொட்டித்தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் வீரர் ஆவேஷ் கானும் அதில் இணைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஏன் முகமது ஷமியை அனைவரும் மறந்தனர்? ஐபிஎல் தொடரில் அவரின் ரெக்கார்ட்கள் அட்டகாசமாக உள்ளன. ஷமி மற்றும் ஆவேஷ் கான் இடையே போட்டி நடந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஷமியை தேர்வு செய்யலாம்.
ஆவேஷ் கானை நான் குறைக்கூறவில்லை. ஆனால் பும்ரா போன்ற வீரர் இல்லாத சமையத்தில், புதிய பந்துகளை கையாள முகமது ஷமி போன்ற வீரரை தான் தேர்வு செய்திருக்க வேண்டும். அது கவலையளிக்கிறது. இதே போல குல்தீப் யாதவ் இருக்கையில் ரவி பிஷ்னாய் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் ஆச்சரியமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now