Advertisement

பாகிஸ்தானின் ஆபத்தான பந்துவீச்சாளர் இவர் தான் - ஆகாஷ் சோப்ரா!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷாகின் அப்ரிடியை விட ஆபத்தான பந்துவீச்சாளர் யார் என்பதை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா சுட்டி காட்டி பேசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 23, 2022 • 11:46 AM
Aakash Chopra warns India from Pakistan Bowlers
Aakash Chopra warns India from Pakistan Bowlers (Image Source: Google)
Advertisement

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன. பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ள இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

கடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. இதனால் நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது பாகிஸ்தானிற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

Trending


இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசும் முன்னாள் வீரர்கள் பலரும், ஷாஹின் அப்ரிடி ஆபத்தான பந்துவீச்சாளர் என்பதால் அவரது பந்துவீச்சை சமாளிப்பது எப்படி என இந்திய வீரர்களுக்கு ஆலோசனை கொடுத்து வரும் நிலையில், ஆகாஷ் சோப்ராவோ ஷாஹின் அஃப்ரிடியை விட ஆபத்தான பந்துவீச்சாளர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “அனைவரும் ஷாகின் அப்ரிடியை பற்றி பேசுகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரையில் ஷாகின் அப்ரிடியை விட பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவூஃபே ஆபத்தான பந்துவீச்சாளர். ஷாகின் அப்ரிடியை விட 154+ வேகத்தில் பந்துவீசக்கூடிய ஹாரிஸ் ரவூஃபின் பந்துவீச்சை சமாளிப்பது எப்படி என்பது குறித்தே இந்திய வீரர்கள் யோசிக்க வேண்டும். உண்மையில் ஆபத்தான பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் தான். ஹாரிஸ் ரவூஃப் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்த போகிறார்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement