
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள 70 போட்டிகள் லீக் சுற்றுக்கான முழு அட்டவணை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது.
கொல்கத்தா அணிக்காக விளையாட இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர அதிரடி வீரர் அலெஸ் ஹேல்ஸ் 1.5 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருக்க விரும்பாத காரணத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அலெஸ் ஹேல்ஸ் நேற்று திடீரென அறிவித்தார்.