
உலகில் நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாகவும் இருக்கலாம். ஆனால் உங்களால் ஒரு சில பந்துவீச்சாளரிடம் மட்டும் எதிர்கொள்ள தடுமாறுவீர்கள். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர் போன்ற பந்துவீச்சாளர்களே அலறவிட்ட சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்கா வீரர் குலுஸ்னர் பந்துவீச்சை மட்டும் எதிர்கொள்ள தடுமாறினார். அப்படி சில பவுலர்களிடம் மட்டும் சில பேட்ஸ்மேன்கள் அதிக முறை ஆட்டம் இழப்பார்கள்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புவனேஸ்வர் குமாரை பார்த்தாலே பயந்து நடுங்குவார் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபிஞ்ச், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ஃபிஞ்ச் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதனை எடுத்து தற்போது மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமாரிடம் தொடர்ந்து நான்கு முறை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டம் இழந்திருக்கிறார். அதில் அவர் அடித்த ரன்கள் 6, 6, 14 மற்றும் 0 ஆகும். புவனேஸ்வர் குமார் தன்னுடைய ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களை அலற விட்டிருக்கிறார். வேகம் குறைவாக இருந்தாலும் அவருடைய ஸ்விங் பந்து வீச்சை எதிர்கொள்வது அவ்வளவு சிரமமான காரியமாக உலகின் முன்னணி வீரர்களுக்கு திகழ்ந்து இருக்கிறது.