Advertisement
Advertisement
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; கனவான ஏபிடி கம்பேக் - ரசிகர்கள் அதிர்ச்சி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் தென்ஆப்பிரிக்க அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

Advertisement
AB De Villiers' 'Retirement Remains Final' As South Africa Announces Squad For Windies, Ireland Tour
AB De Villiers' 'Retirement Remains Final' As South Africa Announces Squad For Windies, Ireland Tour (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2021 • 08:54 AM

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஆணி, இரண்டு டெஸ்ட், ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ளது. இதனைத் தொடர்ந்து அயர்லாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவும் தென் ஆப்பிரிக்க அணி உறுதி செய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2021 • 08:54 AM

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 19 பேர் கொண்ட டெஸ்ட் அணியையும், 20 பேர் கொண்ட டி20, ஒருநாள் அணியையும் இன்று அறிவித்துள்ளது.

Trending

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏபிடி வில்லியர்ஸ் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த டி வில்லியர்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இன்று வெளியான தென் ஆப்பிரிக்க அணியில் அவர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

மேலும் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக டீன் எல்கரும், டெம்பா பவுமா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்ஆப்பிரிக்க டி20 அணியின் கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டீன் எல்கர் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), குயின்டன் டி கோக், சரேல் எர்வி, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி, ஐடன் மார்க்ரம், வயான் முல்டர், அன்ரிச் நோர்ட்ஜே, பீட்டர்சன், ககிசோ ரபாடா, ரஸ்ஸி வான்டெர் டௌசன், கைல் வெர்ரெய்ன், தப்ரைஸ் ஷம்ஸி, லிசாட் வில்லியம்ஸ், ப்ரீனெலன் சுப்ராயன், மார்கோ ஜான்சன்.

தென்ஆப்பிரிக்க டி20 அணி: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி கோக், ஜோர்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஜார்ஜ் லிண்டே, சிசாண்டா மாகலா, ஜேன்மேன் மாலன், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ஆண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி, ரஸ்ஸி வான்டெர் டௌசன், கைல் வெர்ரெய்ன், லிசாட் வில்லியம்ஸ்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement