Advertisement
Advertisement
Advertisement

WI vs PAK, 1st Test: ஆரம்பம் முதலே தடுமாறும் விண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement
Abbas' Double Strike Puts West Indies On Back Foot In First Test
Abbas' Double Strike Puts West Indies On Back Foot In First Test (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 13, 2021 • 11:27 AM

பாகிஸ்தான் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 4 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 13, 2021 • 11:27 AM

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Trending

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சபீனா பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் பஹாத் ஆலம் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார்.  பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடந்து ஆடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் பாவல், பொன்னர் ஆகியோர் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்களை எடுத்துள்ளது. பாகிஸ்தான அணி தரப்பில் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement