
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதபடி களமிறங்கிய லாகூர் அணிக்கு மிர்ஸா தஹிர் - ஃபகர் ஸமான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் மிர்ஸா தாஹிர் 30 ரன்களுக்கும், ஃபகர் ஸமான் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
பின்னர் வந்த அப்துல்லா ஷஃபிக் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், அஹ்சன் பாட்டி, சிக்கந்தர் ரஸா அன அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அப்துல்லா ஷஃபிக் அரைசதம் கடந்ததுடன், 8 பவுண்டர்ன், 2 சிக்சர்கள் என 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.