சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய வரலாற்று சாதனை படைத்த அபிஷேக் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா 1000 ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 23ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைக் குவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 22 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கும், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி - அப்துல் சமத் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிவரும் பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் அபிஷேக் சர்மா 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தாலும் ஐபிஎல் தொடர் வரலாற்றி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 16 ரன்களை அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரின் தனது 1000 ரன்களையும் கடந்தார்.
Abhishek Sharma becomes first Indian Uncapped player to have completed 1000 runs for SRH in IPL history.
— CricketMAN2 (@ImTanujSingh) April 9, 2024
- The future star of Indian cricket & SRH. pic.twitter.com/x8zoupKYil
இதன்மூலம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 1000 ரன்களை கடப்பது இதுவே முதல் முறையாகும். இச்சதனையை அபிஷேக் சர்மா படைத்ததன் மூலம் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துவருகின்றனர். மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி 1000 ரன்களை கடந்த ஆறாவது வீரர் எனும் பெருமையையும் அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
- டேவிட் வார்னர் - 95 போட்டிகளில் 4014 ரன்கள்
- ஷிகர் தவான்- 91 போட்டிகளில் 2768 ரன்கள்
- கேன் வில்லியம்சன் - 76 போட்டிகளில் 2101 ரன்கள்
- மணீஷ் பாண்டே- 51 போட்டிகளில் 1345 ரன்கள்
- ஜானி பேர்ஸ்டோவ் - 28 போட்டிகளில் 1038 ரன்கள்
- அபிஷேக் சர்மா - 49 போட்டிகளில் 1007 ரன்கள்
Win Big, Make Your Cricket Tales Now