Advertisement

மிகவும் உற்சாகமாகவும், திருப்தியாகவும் உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!

அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமான வீரர். அவருக்கு எதிராக ஒருபோதும் நான் பந்துவீச விரும்பவில்லை என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
மிகவும் உற்சாகமாகவும், திருப்தியாகவும் உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!
மிகவும் உற்சாகமாகவும், திருப்தியாகவும் உள்ளேன் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2024 • 08:35 PM

ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 71 ரன்களையும், ரைலீ ரூஸோவ் 49 ரன்களையும் சேர்த்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2024 • 08:35 PM

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் திரிபாதி 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து 66 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மாவும் விக்கெட்டை இழந்தார். 

Trending

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் குமார் ரெட்டி 37 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறபபான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இது மிகவும் அருமையான போட்டியாக அமைந்தது. நாங்கள் இங்கு விளையாடியுள்ல 7 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது சிறப்பான ஒன்றாகும். இந்த சீசனில் எங்கள் அணியின் பல வீரகள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை, ஆனால் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம் என்று நம்புகிறேன். 

அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமான வீரர். அவருக்கு எதிராக ஒருபோதும் நான் பந்துவீச விரும்பவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் அதிரடியாக விளையாடுவதை பார்பதற்கு ஒரு பந்துவீச்சாளராக பயமாக உள்ளது. அதேபோல் எங்கள் அணியில் உள்ள நிதீஷ் குமார் ரெட்டியும் ஒரு கிளாஸ் வீரர். அவ்ரும் அதிரடியாக விளையாடுவதுடன், எங்கள் டாப் ஆர்டருக்கு ஏற்ற வீரராகவும் திகழ்கிறார். 

உண்மையிலேயே எங்கள் அணியை நினைத்து திருப்தியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. நான் இதுவரை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியதில்லை, அது எந்த ஆட்டம் என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். நிஜமாகவே சில நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறேன், வரவிருக்கும் போட்டிகளை நினைத்து உற்சாகமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement