PAK vs ENG, 2nd Test: முதல் போட்டியில் அப்ரார் அபாரம்; இங்கிலாந்து ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களில் ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. டி20 தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, அஷார் அலி, ஹாரிஸ் ராவூஃப் ஆகியோருக்கு பதிலாக முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், அப்ரார் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், சவுத் ஷகீல், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஜாஹித் மஹ்மூத், முகமது அலி, அப்ரார் அகமது
இங்கிலாந்து: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கே), வில் ஜாக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜாக் லீச், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸாக் கிரௌலி- பென் டக்கெட் ஜோடி களமிறங்கியது. ஸாக் கிரௌலி 19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து ஓலி போப் - பென் டக்கெட் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
அதன்பின்49 பந்தில் 63 ரன்கள் எடுத்து பென் டக்கெட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூட் 8 ரன்னிலும் பிரோக் 9 ரன்னிலும் வெளியேறினர். அப்ரார் அகமது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அறிமுக வீரர் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
Win Big, Make Your Cricket Tales Now