Advertisement

AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் விலகியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 10, 2023 • 20:27 PM
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி தற்போது 4 நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடியது.

Trending


இந்த ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் அப்ரார் அஹ்மது முழங்கால் பகுதியில்காயமடைந்தார். இதையடுத்து முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அப்ரார் அகமது விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதனால்  முதலாவது டெஸ்டிற்கு அவருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அப்ரார் அஹ்மத் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக காயத்திலிருந்து மீண்டு பாகிஸ்தான் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement