
Abu Dhabi T10: Danny Briggs' last-ball maximum powers Team Abu Dhabi to thrilling win (Image Source: Google)
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டீம் அபுதாபி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அடுத்து ஜோடி சேர்ந்த வாநிந்து ஹசரங்கா - ஓடேன் ஸ்மித் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
இதன்மூலம் 10 ஓவர்கள் முடிவில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஓடேன் ஸ்மித் 34 ரன்களையும், வநிந்து ஹசரங்கா 30 ரன்களையும் சேர்த்தனர்.