
Abu Dhabi T10: Gurbaz's fastest fifty helps Delhi Bulls register win (Image Source: Google)
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 28ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் - சென்னை பிரேவ்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை அணியில் ஷசாத் 5 ரன்னிலும், ராஜபக்ஷ ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் வந்த கேப்டன் பெரேரா 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களும் சரிவர விளையாடததால் 10 ஓவர்கள் முடிவில் சென்னை பிரேவ்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை மட்டுமே சேர்த்தது.