
Abu Dhabi T10: Hasaranga spins Deccan Gladiators to win over Chennai Braves (Image Source: Google)
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - சென்னை பிரேவ்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்த சென்னை பிரேவ்ஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கம் முதேலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் பனுகா ராஜபக்ஷவைத் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களைக் கூட தொடவில்லை. இதனால் 10 ஓவர்கள் முடிவில் சென்னை பிரேவ்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களை மட்டுமே சேர்த்தது.