
அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் டீம் அபுதாபி மற்றும் நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நார்த்தன் வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அபுதாபி அணிக்கு டாம் பாண்டன் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, 10 ஓவர்கள் முடிவில் டீம் அபுதாபி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை எடுத்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.