
Abu Dhabi T10: Odean Smith's blazing innings takes Deccan Gladiators to table's top (Image Source: Google)
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் அட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி ஓடின் ஸ்மித்தின் அதிரடியான அட்டத்தினால் 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்தது. இதில் ஓடின் ஸ்மித் 33 ரன்களைச் சேர்த்தார்.
பின்னர் இலக்கைத் துரத்திய வாரியர்ஸ் அணிக்கு கென்னர் லூயிஸ், மொயின் அலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் தலா 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.